தைத்திருநாள் வேறு... தமிழ் புத்தாண்டு வேறு.. புரிந்து கொள்ளுங்கள் !
இந்துக்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல...ஆதி காலத்தி லேயே
விஞ்ஞானத்தையும் கரைத்து குடித்தவர்கள். வானவியலில் சிறந்து விளங்கியவர்கள்
இந்துக்கள் தான் என்பதை ஒவ்வொரு தலைமுறையும் கடக் கும் போதும் விஞ்ஞானம்
நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
இந்துக்களின் பண்டிகைகள் எல்லாம்
இறையோடும், விஞ்ஞானத்தோடும் தொடர்பு கொண்டிருந்தது. இந்துக்களின் வழிபாடு
இயற்கையை முதன்மை படுத்தியே இருக்கிறது.. பூமி சூரியனை சுற்றிவரும்
பாதையில் சூரியனை மைய மாக வைத்து 12 பாகங்களாக பிரித்தான். அவைதான் ராசிகள்
என்று அழைக்கப் படுகின்றன.
360 டிகிரியைச் சுற்றிவரும் சூரியனின் தொடக்கம் பூஜ்யம் டிகிரியில் மேஷத்தில் தொடங்குகிறது.
ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பதால் 12 டிகிரிகள்
சுற்றி 360 டிகிரியில் முழுமை அடைகிறது.. சூரியன் மேஷத்திற்குள் நுழையும்
காலம் சித்திரை என்பதால் அறிவியல் ரீதியாகவே சித்திரைத்திங்கள் முதல் நாளை
இந்துக்கள் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தார்கள். இதே போன்று 27
நட்சத்திரங்களில் முதன்மையான அஸ்வினி நட்சத்திரமும் மேஷத்துக்குள்
தொடங்குவதாலும் இதுவே உன்னதமான நாள் என்பது உறுதியாயிற்று.
இந்துக்கள்
ஒவ்வொரு ஆண்டையும் ஆறு பருவங்களாக பிரித்தார்கள். பரு வத்துக்கு இரண்டு
மாதங்கள் வீதம் சித்திரை வைகாசியில் இளவேனிற் பருவ மும், ஆனி ஆடி
முதுவேனில் என்றும், கார்கால பருவம் எனப்படுவது ஆவணி, புரட்டாசியும்,
கூதிர்கால பருவம் ஐப்பசி, கார்த்திகையாகவும், முன்பனிக் காலம் மார்கழி, தை
என்றும் பின்பனிக்காலத்தை மாசி, பங்குனி என்றும் பிரித்தார்கள்.
செடிகளும்
மரங்களும் இலைகளை உதிர்த்து மீண்டும் துளிர்விடத்தொடங்கும் வசந்த காலம்..
எல்லா உயிர்களுக்கும் உற்சாகமான காலமாக இருக்கும் இந் தக் காலத்தில் தான்
இறைவன்களும் உற்சாகமாக திருத்தேரில் பவனி வந்தார்கள். சூரியனை பிரதானமாகக்
கொண்ட வாழ்க்கைமுறையை இந்துக்கள் எல் லோருமே பின்பற்றியதால் இந்தியா
முழுவதும் சித்திரைத் திங்கள் முதல் நாள் புத்தாண்டு தினமாகக்
கொண்டாடப்பட்டது கிறிஸ்துவ மதம் தோன்றியதற்கு முன்பு வரை மேலை நாடுகளும்
கூட ஏப்ரல் மாதத்தையே ஆண்டின் துவக்கமாக கொண்டது என்றும் சொல்வதுண்டு..
வானசாஸ்திர
அடிப்படையிலும் மெய்ஞானத்தின் வழியிலும் சித்திரைத் திங்கள் முதல் நாள்
கொண்டாடப்பட்ட புத்தாண்டு எப்படி தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்பட
முடியும். புராணங்களிலும் இலக்கியங்களிலும் ஏன் அறிவியலும் கூட பூமிக்கும்
சூரியனுக்கும் சித்திரைக்கும் இருக்கும் தொடர்பை ஒப்புக்கொள்ளும்போது
தைத்திருநாள் எப்படி வந்தது..
தைத்திருநாள் என்பது உலகம் முழுக்க
இருக்கும் விவசாயிகளுக் குண்டானது.. பருவங்களாகவே பார்த்தாலும் மார்கழியைத்
தொடர்ந்தே தை மாதம் வருவதால் தைத்திங்கள் புத்தாண்டு கணக்கில் வருவதற்கு
வாய்ப்பு இல்லை. தைத்திருநாள் மகரத்தில் சூரியன் நுழையும் புண்ணியக் காலம்.
மகரம் வரும் போது சூரியன் 270 டிகிரி பாகையில் இருப்பதால் தைமாதத்தை
எப்படி புத் தாண்டாக மாற்றிக்கொண்டாட முடியும். வானவீதியில் இருக்கும்
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மட்டுமே தைத்திருநாள். இது எப்படி
சூரியனின் ஆரம் பத்தோடு பொருந்தி வரும்.
அதனால்தான் தைத்திருநாளை
புத்தாண்டாக அறிவித்த போது விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் பொருந்தாத
ஒன்றை பொருத்தி பார்ப்பது சரியாகாது என்பதை உடனடியாக உணர்ந்துகொண்ட
இந்துக்கள் தைத்திருநாளை அறுவடை கொண்டாட்டமாகவும் சித்திரைத் திங்கள்
முதல்நாளை புத்தாண்டு கொண்டாட் டமாகவும் வழக்கப்படியே
கொண்டாடிவருகிறார்கள். இந்தியாவை தாண்டி உலகில் நேபாளம், ஸ்ரீலங்கா,
தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளும் சித்திரை யைத்தான் புத்தாண்டாக
கொண்டாடுகின்றன.
நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கும்
சொல்லுங்கள்.. பாரம்பரியமிக்க பண்டிகை விஞ்ஞானத்தோடு தொடர்புடையது..
மாற்றப்படுவதோ. மாற்றம் கொள்வதோ உலகம் இருக்கும் வரை மாறாது என்று.
No comments:
Post a Comment