Sunday, 14 April 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை எழுதுவதற்கு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடுவினை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.


அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயரதிகாரிகள் கூறியது: கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் மற்றும் தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 5 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 

No comments:

Post a Comment