Sunday 14 April 2019

தைத்திருநாள் வேறு... தமிழ் புத்தாண்டு வேறு.. புரிந்து கொள்ளுங்கள் !

தைத்திருநாள் வேறு... தமிழ் புத்தாண்டு வேறு.. புரிந்து கொள்ளுங்கள் ! 

இந்துக்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல...ஆதி காலத்தி லேயே விஞ்ஞானத்தையும் கரைத்து குடித்தவர்கள். வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் இந்துக்கள் தான் என்பதை ஒவ்வொரு தலைமுறையும் கடக் கும் போதும் விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.

இந்துக்களின் பண்டிகைகள் எல்லாம் இறையோடும், விஞ்ஞானத்தோடும் தொடர்பு கொண்டிருந்தது. இந்துக்களின் வழிபாடு இயற்கையை முதன்மை படுத்தியே இருக்கிறது.. பூமி சூரியனை சுற்றிவரும் பாதையில் சூரியனை மைய மாக வைத்து 12 பாகங்களாக பிரித்தான். அவைதான் ராசிகள் என்று அழைக்கப் படுகின்றன.

360 டிகிரியைச் சுற்றிவரும் சூரியனின் தொடக்கம் பூஜ்யம் டிகிரியில் மேஷத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பதால் 12 டிகிரிகள் சுற்றி 360 டிகிரியில் முழுமை அடைகிறது.. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் காலம் சித்திரை என்பதால் அறிவியல் ரீதியாகவே சித்திரைத்திங்கள் முதல் நாளை இந்துக்கள் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தார்கள். இதே போன்று 27 நட்சத்திரங்களில் முதன்மையான அஸ்வினி நட்சத்திரமும் மேஷத்துக்குள் தொடங்குவதாலும் இதுவே உன்னதமான நாள் என்பது உறுதியாயிற்று.

இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டையும் ஆறு பருவங்களாக பிரித்தார்கள். பரு வத்துக்கு இரண்டு மாதங்கள் வீதம் சித்திரை வைகாசியில் இளவேனிற் பருவ மும், ஆனி ஆடி முதுவேனில் என்றும், கார்கால பருவம் எனப்படுவது ஆவணி, புரட்டாசியும், கூதிர்கால பருவம் ஐப்பசி, கார்த்திகையாகவும், முன்பனிக் காலம் மார்கழி, தை என்றும் பின்பனிக்காலத்தை மாசி, பங்குனி என்றும் பிரித்தார்கள்.

செடிகளும் மரங்களும் இலைகளை உதிர்த்து மீண்டும் துளிர்விடத்தொடங்கும் வசந்த காலம்.. எல்லா உயிர்களுக்கும் உற்சாகமான காலமாக இருக்கும் இந் தக் காலத்தில் தான் இறைவன்களும் உற்சாகமாக திருத்தேரில் பவனி வந்தார்கள். சூரியனை பிரதானமாகக் கொண்ட வாழ்க்கைமுறையை இந்துக்கள் எல் லோருமே பின்பற்றியதால் இந்தியா முழுவதும் சித்திரைத் திங்கள் முதல் நாள் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது கிறிஸ்துவ மதம் தோன்றியதற்கு முன்பு வரை மேலை நாடுகளும் கூட ஏப்ரல் மாதத்தையே ஆண்டின் துவக்கமாக கொண்டது என்றும் சொல்வதுண்டு..

வானசாஸ்திர அடிப்படையிலும் மெய்ஞானத்தின் வழியிலும் சித்திரைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்பட்ட புத்தாண்டு எப்படி தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்பட முடியும். புராணங்களிலும் இலக்கியங்களிலும் ஏன் அறிவியலும் கூட பூமிக்கும் சூரியனுக்கும் சித்திரைக்கும் இருக்கும் தொடர்பை ஒப்புக்கொள்ளும்போது தைத்திருநாள் எப்படி வந்தது..

தைத்திருநாள் என்பது உலகம் முழுக்க இருக்கும் விவசாயிகளுக் குண்டானது.. பருவங்களாகவே பார்த்தாலும் மார்கழியைத் தொடர்ந்தே தை மாதம் வருவதால் தைத்திங்கள் புத்தாண்டு கணக்கில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தைத்திருநாள் மகரத்தில் சூரியன் நுழையும் புண்ணியக் காலம். மகரம் வரும் போது சூரியன் 270 டிகிரி பாகையில் இருப்பதால் தைமாதத்தை எப்படி புத் தாண்டாக மாற்றிக்கொண்டாட முடியும். வானவீதியில் இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மட்டுமே தைத்திருநாள். இது எப்படி சூரியனின் ஆரம் பத்தோடு பொருந்தி வரும்.

அதனால்தான் தைத்திருநாளை புத்தாண்டாக அறிவித்த போது விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் பொருந்தாத ஒன்றை பொருத்தி பார்ப்பது சரியாகாது என்பதை உடனடியாக உணர்ந்துகொண்ட இந்துக்கள் தைத்திருநாளை அறுவடை கொண்டாட்டமாகவும் சித்திரைத் திங்கள் முதல்நாளை புத்தாண்டு கொண்டாட் டமாகவும் வழக்கப்படியே கொண்டாடிவருகிறார்கள். இந்தியாவை தாண்டி உலகில் நேபாளம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளும் சித்திரை யைத்தான் புத்தாண்டாக கொண்டாடுகின்றன.

நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கும் சொல்லுங்கள்.. பாரம்பரியமிக்க பண்டிகை விஞ்ஞானத்தோடு தொடர்புடையது.. மாற்றப்படுவதோ. மாற்றம் கொள்வதோ உலகம் இருக்கும் வரை மாறாது என்று.

 

இன்றைய ராசிபலன்கள் 14.04.2019

இன்றைய ராசிபலன்கள் 14.04.2019

 

மேஷம்        இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 
 
ரிஷபம்       இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

மிதுனம்      இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5 
 
கடகம்        இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுத்தம், சுகாதாரம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5 
 
சிம்மம்        இன்று பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3
ராசி பலன்கள்
கன்னி இன்று எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 
 
துலாம்       இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

 
விருச்சிகம்       இன்று வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 
 
தனுசு     இன்று வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 
 
மகரம்     இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
 
 
கும்பம்        இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
 
 
மீனம்       இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

நீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..!

நீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..! 

மருத்துவப் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வறை நுழைவுச் சீட்டினை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால டிசம்பர் 7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவெண் கொண்டு www.nta.ac.in அல்லது www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த நீட் தேர்விற்கான முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை எழுதுவதற்கு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடுவினை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.


அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயரதிகாரிகள் கூறியது: கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் மற்றும் தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 5 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 

Saturday 13 April 2019

ஏப்.18 வரை பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க உத்தரவு

மக்களவைத் தேர்தல் பணிகள்: ஏப்.18 வரை பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க உத்தரவு 

 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 18 வரை அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைந்துள்ளன. வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-இல் முழுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு ஏதுவாக, வரும் 18-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பான அறிவுறுத்தலை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு உடனடியாக தெரியப்படுத்தி அந்தப் பள்ளிகளை கண்காணிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை 

கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என கடந்த ஆண்டு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆண்டு கோடையில் வெப்ப நிலை மிகத் தீவிரமாக உள்ளதால் மாணவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும். மேலும் கோடை விடுமுறை என்பது மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்து கொள்ளவும் உறவுகளை மேம்படுத்திடவும் நல்ல வாய்ப்பாகும். இதனால் மாணவர்களின் வாழ்வியல் விழுமியம் மேம்படும். 


எனவே, மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது. இதனை பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன என பெற்றோரிடமிருந்து பள்ளிகள் மீது புகார் வரப்பெற்றால், அதன் மீது எந்தவித கால தாமதமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய குழு உள்ளதா? பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய குழு உள்ளதா? பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: ஏப்.15, 16- இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: ஏப்.15, 16- இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் 

தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஏப்.15, 16 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அளவில் ஜூன் 2019-இல் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை சேவை மையங்களுக்குச் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், பழைய பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத, வரும் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுத இறுதி வாய்ப்பாகும்.


இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே கடந்த 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வு மையத்துக்கு ஏப்.15, 16 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வு மையங்களின் விவரத்தைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த மையங்களிலேயே தேவையான விவரங்களைப் பெற்று தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தலாம். இதில் இணையதளத்தில் பதிவு செய்த பின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசு தேர்வுத் துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுக்கூட சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால் இந்த ஒப்புகைச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.